ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் சூரியகுமாரை அணியின் கேப்டன் ஆக்கினால் அது அவருக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்றும் மும்பை அணி நிர்வாகத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் கடந்த பத்து வருடங்களாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த நிலையில் கடந்த வருடம் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.