2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவமாக ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். தற்போது, 16 வருடங்கள் கழித்து, ஹர்பஜன் சிங் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். “இது சரியில்லை. என் தவறு. இதை செய்யக்கூடாது. ஆனால் தவறுகள் நடக்கக்கூடும் – நான் மனிதன் தான், கடவுள் இல்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு ஹர்பஜனுக்கு தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். பின்னர் அந்த பொறுப்பை ஷான் பாலக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே சம்பவம் குறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது, “நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருந்தோம். அது ஒரு தவறான புரிதல்தான். மீடியாவே அதை பெரிய விஷயமாக மாற்றியது.

ஹர்பஜன் அண்ணா எனக்கு என் தொடக்க காலத்திலிருந்தே பல வழிகளில் உதவி செய்துள்ளார். சமீபகாலமாகவும், கமெண்டரி குறிப்புகள் கொடுத்து உதவியுள்ளார். அவருக்கு நன்றி.” என தெரிவித்தார். இந்த சம்பவம் கடந்துபோனாலும், ஹர்பஜன் தற்போது IPL 2025-ல் கமெண்டேட்டராக செயல்பட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில், ஜோஃப்ரா ஆச்சரை “காலி டாக்ஸி” எனக் கூறி, இனவெறி விமர்சனத்தில் சிக்கியுள்ளார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.