நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிஇன்று தோல்வியை தழுவினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்த அணி 10 புள்ளிகள் உடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால் தொடர் வெற்றிகளை பெங்களூரு அணி பதிவு செய்து வருவதால் இன்றும் கோலியின் ருத்ரதாண்டவம் இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.