
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 தொடரில் வங்காளதேச கிரிக்கெட் அணி மற்றும் யுஏஇ அணியினருக்கு இடையே நேற்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
அதில் முதலில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் 7 விக்கெட் களை இழந்து 191 ரன்கள் எடுத்தது வங்காளதேச அணி. அந்தப் போட்டியில் அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் சதம் அடித்தார்.
இதனை அடுத்து களம் இறங்கிய யுஏஇ அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதன் பின் அந்தப் போட்டியில் வங்காளதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
இதில் குறிப்பாக பர்வேஸ் ஹொசைன் வெறும் 53 பந்துகளில் சதம் அடித்து விளாசினார். இதனை அடுத்து குறைந்த பந்துகளில் சதம் அடித்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் தமீம் இக்பால் 60 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்ததை முறியடித்து பர்வேஸ் புதிய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச t20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இரண்டாவது வங்காளதேச வீரர் என்ற சாதனையை பர்வேஸ் பெற்றுள்ளார்.