சாம்பியன் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் 3ஆவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு “வெள்ளை ஜாக்கெட்” பரிசு பெற்றுக் கொண்டிருந்த போது கவாஸ்கர் திடீரென ஆடினார்.

இதைப் பார்த்த அனைவரும் இந்த தருணத்தை தங்களுடைய மொபைல்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  1,32,000 பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது,”நாம் அவர் ஆட்டத்தை நிறுத்தக்கூடாது. இது மிகவும் அழகான தருணம். அவர் உண்மையில் ஒரு மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரர். அவரைப் பார்த்து தான் பலர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். இன்று அவர் அந்த  உணர்வை மீண்டும் அனுபவிக்கிறார்”என தெரிவித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் “75 வயதில் கூட அவர் எந்த அளவுக்கு பிட்டாக இருக்கிறார்,  நன்றாக நடனம் ஆடுகிறார்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Star Sports India (@starsportsindia)