இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புள்ளது..

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த தொடரின் மூலம் டி20யில் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி விரும்புகிறது. உலகின் நம்பர் 1 டி20 அணியான இந்தியா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 3-2 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. ஆனால் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் அயர்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது..

அயர்லாந்து தொடரின் போது 11 மாதங்களுக்கு பின் வந்துள்ள ஜஸ்பிரிட் பும்ராவின் மேல் தான் அனைவரின் பார்வையும் இருக்கும். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், ரின்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா போன்றவர்கள் சர்வதேச அரங்கில் அறிமுகமாக உள்ளனர்.

ஆனால் பும்ராவின் வருகை வானிலையால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, ஏனெனில் ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு (இரவு 7:30 மணி இந்திய நேரம்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் AccuWeather இணையதளத்தின் வானிலை அறிக்கையின்படி, ஆட்டத்தின் தொடக்கத்தில் 67%  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது..

மழை வில்லனாக மாறும் :

ஆகஸ்ட் 18 ஆம் தேதி டப்ளினில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதனால் போட்டி தாமதமாகலாம். பும்ரா ஆடுகளத்திற்குத் திரும்புவதை அச்சுறுத்தும் வகையில் மழை விளையாடபார்க்கிறது. 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் வேக தாக்குதலை அதிகரிக்க மேட்ச்-ஃபிட்னெஸ் தேவை. அவர் NCA மற்றும் வரவிருக்கும் ஆட்டத்திற்கு முன்னதாக பயிற்சி அமர்வுகளில் முழு குணமடைவதற்கான நல்ல அறிகுறிகளைக் காட்டியுள்ளார்.. ஆனால் மீண்டும் பழைய ரிதம் பெற அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது அதிகபட்ச ஓவர்கள் வீசுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் பும்ரா..

இந்திய டி20 அணி :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான், பிரசீத் கிருஷ்ணா.

அயர்லாந்து டி20 அணி :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அடேர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, தியோ வான் வோர்காம், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.