2023 உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில், இப்போது இந்திய அணி 2024 டி20 உலக கோப்பைக்கு கவனம் செலுத்த தயாராகி விட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 சர்வதேச போட்டியில் நவம்பர் 23ஆம் தேதி (நாளை) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் இந்த தொடரில் தங்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.

யாருக்கு வாய்ப்பு ருதுராஜ் அல்லது யஷஸ்வி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தொடக்க ஜோடியாக யாரை களமிறக்குவது என்பதுதான் ரசிகர்கள் முன் இருக்கும் பெரிய கேள்வி. இஷான் கிஷன் விளையாடுவது உறுதி என்று கருதப்படுகிறது. ஆனால் ருதுராஜ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.

அனுபவத்தை கருத்தில் கொண்டு முதல் போட்டியில் ருதுராஜுடன் அணி நிர்வாகம் செல்லலாம். 3வது இடத்தின் பொறுப்பு திலக் வர்மாவின் தோள்களில் இருக்கும், அதே நேரத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் இருக்க முடியும். அதே சமயம் கடைசி ஓவர்களில் விளாச வேண்டிய பொறுப்பு ரிங்கு மற்றும் ஷிவம் துபே மீது இருக்கும்.. ருதுராஜ் தலைமையில் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.

அக்சர் படேல் மீண்டும் களமிறங்குவார் :

காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையை தவறவிட்டவரான அக்சர் படேல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில்  திரும்புவது உறுதி  கருதப்படுகிறது. அக்ஷருடன், வாஷிங்டன் சுந்தரும் விளையாடும் லெவனில் இடம் பெறலாம். காயம் காரணமாக சுந்தர் நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.

அர்ஷ்தீப் பந்துவீச்சு பொறுப்பை ஏற்பார் :

வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் அர்ஷ்தீப்புக்கு ஆதரவாக இருப்பார்கள். சுழற்பந்து வீச்சாளராக அக்ஷரும், சுந்தரும் ஆடலாம். 5 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி டிசம்பர் 3ம் தேதி நடக்கிறது..

 டி20 இந்திய அணியின் சாத்தியமான 11 :

இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.