ஏழை எளிய குழந்தைகளின் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை பார்க்கும்/ ஓய்வு பெற்ற/ பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகையை அரசு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது தொழில்நுட்பக் கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2024-25ம் கல்வியாண்டிற்கான உதவித்தொகையாக 50,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த உதவி தொகையை பெற விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று 24ம்  தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்னதாக உதவித்தொகையைப் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.