2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடும். புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.தற்போது இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி 5 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. 10 புள்ளிகள் மற்றும் +1.353 நிகர ரன் விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரையிறுதிக்கு வர குறைந்தபட்சம் 6 போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம். எனவே அடுத்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு இடம் உறுதியாகிவிடும். இந்தியா இன்னும் 4 போட்டிகள் விளையாட உள்ளது.

4 ஆட்டங்களில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்கான இடம் உறுதியாகி விடும். அக்டோபர் 29-ம் தேதி இங்கிலாந்து, நவம்பர் 2-ம் தேதி இலங்கை, நவம்பர் 5-ம் தேதி தென்னாப்பிரிக்கா, நவம்பர் 12-ம் தேதி நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக டீம் இந்தியாவின் ஆட்டம் நடைபெறுகிறது.

நான்கில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு எளிதானது தான். எனவே ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா எளிதாக தகுதி பெறும். அதே சமயம் நியூசிலாந்தின் அரையிறுதியும் ஏறக்குறைய உறுதியாகி விடும்.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.