
கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பெரும் தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், காணொலி மூலம் டெஸ்லா, ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான்மஸ்க் கலந்து கொண்டார்.
இவர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடலின் போது டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான்மஸ்க் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, ”நான் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக சாதிப்பேன். அடுத்த 5 ஆண்டுகள் மட்டும் அல்ல, அதன் பிறகும் நான் தான் தலைவராக இருப்பேன். அந்த இடத்தை யாருக்காகவும், எப்போதும் விட்டுக் கொடுக்க வாய்ப்பு இல்லை. எப்போதும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவேன்” என்று கூறினார்.
அதோடு தனது எக்ஸ் பக்கத்தில் ”தேர்தல் காலங்களில் வழங்கப்படும் நிதியின் அளவை இனிமேல் குறைத்து விடுவேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக ரூ.2500 கோடி செலவழித்ததால், அவருடைய டெஸ்லா நிறுவன கார் விற்பனை நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கதாகும்.