பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையான சயாமி கெர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்து உள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சாய் துர்கா தேஜ் நடிப்பில் வெளியான ரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாலிவுட்டில் தனக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்றை கூறினார்.

அதாவது ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு 19 முதல் 20 வயது இருக்கும். அந்த வாய்ப்பு கிடைக்க என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூறினார்கள். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் நடிக்க முடியும் என்றால் அது எனக்கு தேவையில்லை என்று நிராகரித்து விட்டேன் என்று கூறினார். சயாமி கெர் கடைசியாக சன்னி தியோனின் ஜாத் படத்தில் எஸ்ஐ விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.