செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டை  இந்தியாவில் இருந்து பிரிக்க தள்ளுறது யாரு? ஊர் ஊரா போய் நாங்க பேசுறதை பேசிட்டு இருக்கீங்க.  தமிழ் மொழி சிறந்த மொழி,  உலகத்தின் தொன்மையான மொழி என்று…

அப்ப ஏன் பாராளுமன்ற வாசலில் சமஸ்கிருதத்துக்கு கல்வெட்டு இருக்கு ? ஏன் எங்க தாய் மொழிக்கு இல்லை. மொழி வழியே மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. தேசிய இனங்கள், நிலங்கள் என்று சமஸ்கிருதத்துக்கு பிரிக்கப்பட்ட மாநிலம் எது ? ஏன் பிரிக்கல ? ஏன்னா..  அது இல்ல.

அப்போ எதுக்கு சமஸ்கிருததுக்கு நீங்க குடுக்குற முக்கியத்துவத்தை எனக்கு தர மாட்டேங்கறீங்க….  அப்புறம் பிரிக்க பார்க்கிற…  பிரிக்க பார்க்கிறனா? கச்சத்தீவை மீட்க முடியல, காவிரி உரிமையை பெற்று தர முடியல, முல்லைப் பெரியாற்றில் எந்த உரிமையும் எனக்கு பெற்று தர முடியல. என் நிலத்தை – வளத்தை – கொள்ளை அடிக்கிறதுக்காக நீ என்ன பயன்படுத்துகிற.

வெறும் வாக்குக்கும், வரிக்கும், வள கொள்ளைக்கும் பயன்படுத்துகிற தெளிவா தெரியுது. எத்தனை தலைமுறைக்கு நாங்க இப்படி கைகட்டி நிக்க முடியும். இந்த நாட்டு விடுதலைக்கு நாங்கள் போராடவில்லையா ? செக்கிழுக்கலையா ? சிறைப்படலையா ? தூக்குல தொங்கலையா ? வதைபடலையா ?  மிதி படலையா ? உயிர்த்தியாகம் செய்யலையா ? ரத்த சிந்தலையா ? என்ன உரிமை எங்களுக்கு இருக்கு. சும்மா வந்து பிரிக்கிறான்,  பிரிக்கிறான்னு…  பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடா இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்,அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.