ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி (673 ரேட்டிங்) முதலிடம் பிடித்துள்ளார். இதுவே அவரது இதுவரையிலான அதிகபட்ச சாதனையாகும். தரவரிசையில் ஜோஷ் ஹேசில்வுட்டை (663 ரேட்டிங்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை எட்டியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வெற்றிக்கு அவர் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவர் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். பாகிஸ்தானின் 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2023 உலகக் கோப்பை போட்டியிலும் அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆடம் ஜம்பாவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இருவரும் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மூன்றாவது இடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங்கில் பாபர் அசாம் முதலிடம்.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஷகிப் ஹல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.