மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா vs இலங்கை அணிகள் மோதிகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த போட்டியில் வென்று, 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இடம்பிடிப்பதே ரோகித் முயற்சியாக இருக்கும். ஆனால் கிட்டத்தட்ட இந்திய அணி அரை இறுதி இடத்தை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். மேலும் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை எட்ட முடியும்.. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 500 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் படைத்துள்ளார். டி காக் 7 இன்னிங்ஸ்களில் 545 ரன்கள் குவித்து முதலிடத்தில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 6 போட்டிகளில் 398 ரன்கள் குவித்து 4வது இடத்தில் உள்ளார். ரோஹித்தை முந்தி ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் வார்னர் 6 இன்னிங்சில் 413 ரன்களும், நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா 415 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் 354 ரன்கள் குவித்து 7வது இடத்தில் உள்ளார். விராட்டை விட பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் முன்னிலையில் உள்ளார். ரிஸ்வான் 7 இன்னிங்ஸ்களில் 359 ரன்கள் எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக 6 ரன்கள் எடுத்தவுடன் கோலி ரிஸ்வானை பின்னுக்கு தள்ளுவார்.

டி காக் சதம் அடித்தவுடன் ரோஹித்தை சமன் செய்வார்:

தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 7 இன்னிங்ஸ்களில் 362 ரன்கள் குவித்துள்ளார். மார்க்ரம் 5வது இடத்தில் நீடிக்கிறார். இந்த உலகக் கோப்பையில் டி காக் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். ஒரு சதம் அடித்தால், ஒரே உலகக் கோப்பையில் அதிக 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்வார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை ரச்சின் ரவீந்திரா, டேவிட் வார்னர் ஆகியோர் தலா 2 சதங்களும், ரோஹித், மார்க்ரம், ரச்சின், கோலி ஆகியோர் தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.