சென்னை உச்ச நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் என்னை நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசினார். அதற்காக அவர்  5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும். அதோடு அவர் வாய்மொழி மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையாகவோ என்னை பற்றி இனி அவதூறாக பேசமாட்டேன் என்று அவர் கூற வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிங்கமுத்து, நடிகர் வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கப் போவதில்லை என்று மனு அளித்திருந்தார். முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வடிவேலை பற்றி அவதூறாக பேசிய சிங்கமுத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.