
IPL 2025 சீசன் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதுவரை நடந்த IPL சீசன்கள் பல வீரர்களின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றியுள்ளன. அந்த வரலாற்றில் இடம் பெற்றவர்களில் ஒருவர் தான் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவரை கடந்த 2013ல் மும்பை இந்தியன்ஸ் ரூ.5.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் ரூ.4.2 கோடிக்கு அவரை வாங்கியுள்ளது.
மேக்ஸ்வெல் தனது வாழ்க்கை திருப்பத்தை பற்றி Hawi Games பாட்காஸ்டில் பகிர்ந்தார். “2013ல் இங்கிலாந்தில் இருந்தபோது ATM-க்கு சென்று பணம் எடுத்தேன். அப்போது என் கணக்கில் ஒரு ஆறு இலக்கம் தொகை இருந்தது. அது என்னுடைய கணக்கு இல்லை. எனவே எனக்கு குழப்பமா, பயமா தெரியாமல் உடனே வீட்டுக்கு ஃபோன் செய்து பேசினேன். என்ன செய்யணும், எங்கு போகணும் என தெரியாமலே இருந்தேன்,” என்று கூறியுள்ளார். பின்னர் நிதி ஆலோசகரை சந்தித்து, பணத்தை சரியான வழியில் பயன்படுத்த திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான் ஒருபோதும் எனக்கு இவ்வளவு பணம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. வளர்ந்தபோது வீட்டுக்கு பணம் வந்தா போதும், ஒரு காரு வாங்கிக்கலாம், வீட்டுக்குள் நிம்மதியா இருக்கலாம் என்பதே என் எண்ணம். ஆனா IPL என் வாழ்கையை முழுமையாக மாற்றியது,” என்றார் மேக்ஸ்வெல். ‘ஜீரோவில் இருந்து ஹீரோவாக மாறிய அந்த தருணம் என் வாழ்நாள்ல மறக்க முடியாத ஒன்று’ என உருக்கமாக தெரிவித்தார்.