
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் திரிப்தி டிம்ரி. இவர் மாம் மற்றும் லைலா மஜ்னு போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த வருடம் வெளியான “அனிமல்” படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்கி கவுசல் ஜோடியாக “பேட் நியூஸ்” படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை திரிப்தி டிம்ரி தன்னுடைய கிரஸ் குறித்து கூறியுள்ளார். அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் போது சாருக்கானை அவருக்கு பிடிக்குமாம் . அந்த வயதில் நான் ஷாருக் காரனை திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை திரிப்தி குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனை திரிப்தி ஒரு பேட்டியில் கூறிய நிலையில் ரசிகர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.