வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13 அன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் பரப்புரை முடிவடைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒரு சிறப்பான ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த ரோடு ஷோ நிகழ்வில், “I ❤️ Wayanad” என்று எழுதியிருந்த ஒரு டீ-ஷர்ட் அணிந்து அவரின் ஆதரத்தை வெளிப்படுத்திய ராகுல், மக்களின் கவனத்தை ஈர்த்தார். ராகுல் காந்தியின் டீ-ஷர்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் வயநாடு மக்களுக்கான பாசத்தையும், அவர்களுடன் தன்னுடைய நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.