தமிழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாக கடந்த 3 மாதங்களாகவே கூறப்படும் நிலையில் வருகிற 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக பவள விழாவின்போது அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் யூடியூபில் ஒரு தலைப்பை பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். அதாவது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி. நடிகர் ரஜினிகாந்த் ஆதங்கம் என்று அந்த தலைப்பில் இருந்தது.

அதன்பின் உள்ளே சென்று பார்த்தால் அரசியல் பற்றி கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் என்று உதயநிதி கூறியிருந்தார். பத்திரிக்கை நண்பர்கள் இப்படி ஒரு விஷயத்தை பரபரப்பாக கூறும் போது பதற்றம் ஏற்படுகிறது. அவர் அவசர வேலையாக எங்கோ சென்று கொண்டிருக்கிறார். அவரிடம் சென்று உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்வி கேட்டால் அவர் எப்படி பேசுவார். எனவே ரோட்டில் வருவோர் போவோரிடமெல்லாம் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்காதீர்கள். அதைப்பற்றி முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் நான் இப்படி கூறியதால் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்து விட்டார் என்று கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.