
இங்கிலாந்தில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜூடி டென்ச். இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ‘எம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் புகழ்பெற்றார். அதன் பின் கடந்த 1992ம் ஆண்டு ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ என்ற படத்தில் நடித்து, அதற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். அதோடு இவர் 1997ம் ஆண்டு மிசஸ் பிரவுண், ஐரிஸ் 2001, நோட்ஸ் ஆன் எ ஸ்கேண்டல் 2006, கோல்டன் ஐ 1995 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு தற்போது 91 வயதாகின்றது. இந்நிலையில் இவர் தனது பார்வையை இழந்து விட்டதாகவும், தன்னால் தனியாக எந்தவித எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நான் என் கண் பார்வையை இழந்துவிட்டேன். யாரோ ஒருவர் எனக்கு துணையாக எப்போதும் இருக்க வேண்டும், இல்லை என்றால் விழுந்து விடுவேன். இதனால் படங்களில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டிலேயே இவர் தனது கண் பார்வையை மெதுவாக இழந்து வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.