தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பல நடிகர்களுடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்குகிறார். நடிகை ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் இல்லை காதலிப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசை நடிகை ராஸ்மிகா காதலிப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியின் போது நடிகர் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் தான் ராஷ்மிகாவை காதலிக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். அவர் நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான். ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு அடிக்கடி செல்வதால் எதார்த்தமாக விமான நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம். அதை வைத்து நாங்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரப்பி விட்டார்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர்களின் காதல் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.