
சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகிய இருவரும் தங்கள் காதல் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி மிகவும் வைரலானது. முரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு திருமணம் நடைபெறுவதை குறித்து நெடிசன்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சாய் தன்ஷிகாவின் ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடரை தொடர்ந்து யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை சாய் தன்ஷிகா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் பல அமைந்துள்ளது. இந்த படத்தை கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். இதனை ஸ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.