இன்றைய காலகட்டத்தில் சமுதாயங்களில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டு வருவது சாதாரணமாக உள்ளது. அவ்வாறு வெளிவரும் வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

சிலர் பிரபலம் ஆவதற்காகவே பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறு வெளியான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தி என்னும் பகுதியில் குஷ்பூ பதக் என்னும் பெண் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பெரிதளவில் வைரலாகி வருகிறது. அதில் அந்தப் பெண் தனக்கு 23 வயதில் 24 குழந்தைகள் இருப்பதாக கூறினார். அதோடு அவர்களுள் இரட்டை குழந்தைகளும் இருக்கிறார்கள், அவர்களின் வயது 2 முதல் 18 வயது வரை என்றும் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இணையதள வாசிகள் இது உண்மையாக இருக்க முடியாது என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அப்போது இந்த வீடியோவின் உண்மையை ஆராயும் பட்சத்தில் நியூஸ் 18 சேனல் உத்தர பிரதேசத்தில் உள்ள குஷ்பூ பதக் வீட்டிற்கு செய்தியை உறுதி செய்வதற்காக நேரில் சென்றனர். அப்போது அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த போது அந்தப் பெண் பொய் சொல்லி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து ஆய்வு செய்கையில் 2 குழந்தைகளின் பெயர்கள் மட்டுமே ரேஷன் அட்டையில் இருப்பது தெரிய வந்தது. அவ்வாறு இருக்கும் போது நீங்கள் கூறியது பொய் என்று அந்த பெண்ணிடம் கேட்கும்போது அந்தப் பெண் அவர் வீடுகளில் வளர்த்து வரும் மரங்களை தான் குழந்தைகளாக கூறினார் என்பது தெரிய வந்தது.