
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூரா சாமி (44), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூரா சாமி தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் அலறி துடித்த மனைவியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தில் இதற்கு காரணம் தனது கணவன் தான் என்று கூறினார். இதையடுத்து காவல்துறையினர் ஜெயலட்சுமியின் கணவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பூரா சாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்திரவிட்டது.