
சென்னை மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93 வது ஆண்டு மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கினார். அதன் பின் மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது, பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
பட்டப் படிப்பு முடித்து பலரும் தங்கப்பதக்கம் பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்ய அவர்களுக்கு குறைவான இடமே அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பட்டமளிப்பு விழா முடிந்த பிறகும் தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளிடம் பேசும் பொழுது பலரும் சென்னைக்கு படிக்க தயங்குவதாக தெரிகிறது.
சென்னையில் படிப்பது பாதுகாப்பானதாக இல்லை என அவரது பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களை பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக மாற்ற வேண்டும். இந்த காலகட்டத்தில் பட்டப் படிப்பு முடித்த பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவானதாகவே உள்ளது. இவ்வாறு பெண்கள் பாதுகாப்பு குறித்து கவர்னர் உரையாற்றினார்.