சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவான்மியூரில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுர அடியில் வீடு வாங்கி கடந்த 1995-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி திருவான்மியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். கடந்த மாதம் 17-ஆம் தேதி திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனது வீட்டு கிரைய பத்திரம் தொலைந்து போய்விட்டதாக முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் ராஜகோபாலனுக்கு அலைக்கழிப்பு இல்லாமல் பத்திரம் கிடைக்க உரிய ஏற்பாடு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனால் போலீசார் பத்திரத்தை தேடி பார்த்தனர். ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே கண்டறிய முடியாத சான்றிதழ் இன்று பட்டியலிட்டால் புதிய பத்திரம் பெறுவதற்கு சட்டத்தில் வழி இருக்கிறது. அந்த விதியை பின்பற்றி முதியவர் ராஜகோபாலனுக்கு புதிய பத்திரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். அதன்படி அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வயதான காலத்தில் தனது உறுதுணையாக இருந்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் திருவான்மியூர் போலீசாருக்கு ராஜகோபாலன் நன்றி தெரிவித்தார்.