நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி, சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் ‘சொர்க்கவாசல்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த 23ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த உள்ளார். அதோடு கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி கூறியதாவது, பிளான் பண்ணி விஜய் டிவியில் ஒரு நாளைக்கு தொகுத்து வழங்கி விட்டால் சிவகார்த்திகேயனாக மாறிவிட முடியாது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் அவரது திறமையை வெளிக்காட்டி உள்ளார். அது மக்கள் அனைவருக்கும் பிடித்தது, அதனால் தான் அவர் விஜய் டிவியில் இருந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார். விஜய் டிவிக்குள் வந்தாலே சிவகார்த்திகேயன் போல் ஆகிவிட முடியாது என்று அவர் கூறினார்.