தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நமீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜயகாந்த் உடன் “எங்கள் அண்ணன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சரத்குமார், விஜயகாந்த், அஜித், விஜய், சத்யராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் நடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர் பிக் பாஸ் ஷோவுக்கு சென்றார். அதன் பின்பும் அவருக்கு பெரிய அளவில் படங்கள் ஒன்றும் வரவில்லை. அதன்பின் பாஜக கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அவரது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடிகை நமிதா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமியை தரிசிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அதிகாரி ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி நீங்கள் இந்து என்பதற்கான சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த அதிகாரி அவரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நடிகை நமீதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்  “நான் ஒரு இந்து என்பது அனைவருக்கும் தெரியும் எனது திருமணம் திருப்பதி கோவில் வைத்து தான் நடந்தது. எனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்ற கிருஷ்ணர் பெயரை தான் வைத்துள்ளேன். கோவிலில் இதுபோன்று அதிகாரிகள் கேட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் பல கோவிலுக்கு சென்றுள்ளேன் இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இதுபோன்று என்னிடம் கேட்டதில்லை” எனவும் தன்னை உள்ளே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் குற்றச்சாட்டு வைத்துள்ளார் நடிகை நமிதா.

இதற்கு அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நடிகை நமீதாவுக்கு வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் ” நடிகை நமீதா கூறிய புகார் விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க உத்திரவிட்டுளேன். அவர்கள் மனம் புண்படும்படியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ ஏதேனும் நடந்திருந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். சகோதரி நமிதா வருத்தப்பட வேண்டாம் ஒருவேளை அவர் பெரிய அளவில் வருத்தப்பட்டு இருந்தால் அதற்காக நாங்களும் வருந்துகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.