
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சீனாவின் கடையோர கடைகளின் மிகவும் பிரபலமான உணவான மோமோஸை நபர் தயார் செய்கிறார்.
China 😭pic.twitter.com/Os61Er2O97
— Kreately.in (@KreatelyMedia) June 11, 2025
அதில் அவர் மாவை எடுத்து அதை தனது காலால் அழுத்தி சப்பாத்தியை போல் தேய்கிறார். அதன் பின் அதனை எடுத்து அதில் சில பூரணங்களை வைத்து மோமோஸ் போல மடித்து வைக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.