இப்போது போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாகி விட்டது. பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் ரூ.2,000 அபராதம் செலுத்தவேண்டியது வரும். தற்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்கு கூட போக்குவரத்து காவலர்கள் அபராதம் போடுவதை பார்க்க முடியும். இந்நிலையில் புது போக்குவரத்து விதிகளின் படி நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் உங்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

புது போக்குவரத்து விதிகளின் படி மோட்டார்சைக்கிள் (அ) ஸ்கூட்டர் ஓட்டும்போது ஹெல்மெட் ஸ்டிரிப் அணியாமல் இருந்தால் விதி 194D மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் உங்கள் ஹெல்மெட் மோசமாக இருந்தாலோ (அ) BIS முத்திரை இன்றி இருந்தாலோ ரூ.1,000 அபராதம் செலுத்தவேண்டும்.

ஹெல்மெட் அணிந்த பிறகும் புது விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும். நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்குகிறது. புது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும்.