தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காட்டும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வருகின்ற 5-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவக்கூடும். இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அதிதீவிர மழைக்கான மேகங்கள் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது எனவும் அங்கு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.