
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய மண்ணில் தொடர்ந்து 17 டி20 தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மண்ணில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமின்றி சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருந்த 6 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் ஒரு போட்டியை கூட இழக்காத இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் டி20 கேப்டன்களிலே அதிக வெற்றி சதவீதத்தை கொண்டது இவர்தான். இதுவரை இந்திய அணிக்கு ரோகித் சர்மா 62 போட்டிகளில் கேப்டனாக இருந்து, அதில் 50 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அடுத்ததாக விராட் கோலி 50 டி20 போட்டிகளில், 32 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தோனி கேப்டனாக இருந்தபோது 72 டி20 போட்டிகளில், 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். சூரிய யாதவ் 21 போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அதோடு மற்ற 3 வீரர்களை விட அதிக வெற்றி சதவிகிதத்தை வைத்திருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிகரமான டி20 கேப்டன் முத்திரையை சூரியகுமார் யாதவ் பதித்திருக்கிறார்.