தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் கமல்ஹாசன் மற்றும் சிம்பு. இவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைவ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

 

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு, திரிஷா, கமல்ஹாசன், அபிராமி என பலரும் படத்தைப் பற்றி பேசினர். அப்போது கமல்ஹாசன் மலையாள நடிகரான ஜோஜூ ஜார்ஜை புகழ்ந்து பேசினார். இதனை கேட்ட அவர் ஆனந்தத்தில் கண் கலங்கினார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அப்போது கமல்ஹாசன் கூறியதாவது நான் 30க்கும் மேற்பட்ட இரட்டை வேடங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உருவத்தில் ஏதோ ஒரு வேறுபாடு இருக்கும். ஆனால் நடிகர் ஜோஜூ நடித்த இரட்டா படத்தில் அவர் ஒரு காவல் நிலையத்திற்குள் ரெட்டை வேடங்களில் நடித்திருப்பார். அவர் எந்த ஒரு உருவம் மாறுபாடும் இல்லாமல் நடித்திருப்பார். நான் பெருமைப்படும் நடிகர்களுள் அவரும் ஒருவர் என்று கூறினார். இதை கேட்ட நடிகர் ஜோஜூ கமலுக்கு நன்றி தெரிவித்து கண்கலங்கினார்.