புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோடைகாலங்களில் பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது. செயற்கையான முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு சோதனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.