ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்‌.வி. சுப்பா ரெட்டி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அலிபரி நடைபாதை வழியாக நடந்தே வரும் பக்தர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் இலவச டோக்கன்கள் வழங்கப்படும். இந்த நடைபாதை வழியாக வருபவருக்கு ஒரு நாளைக்கு 10,000 இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.

இதேபோன்று ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக வருவோருக்கு ஒரு நாளைக்கு 5,000 டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். கோடை விடுமுறையில் திருப்பதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விஐபி தரிசனம் பெருவாரியாக குறைக்கப்படும். இதன் மூலம் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, சுற்றுலா இட ஒதுக்கீடு, ஆன்லைன் சேவை மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் போன்றவைகளின் விலையும் சற்று குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.