தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அவர் ரேஸிங்கிலும் பங்கேற்று வருகிறார். முன்னதாக அவர், ரேஸிங் சீசனில் தான் படத்தில் நடிக்க மாட்டேன் ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஜிடி 4 கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அப்போது அவரது காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. ஆனால் இந்த விபத்தில் நடிகர் அஜித் காயமின்றி உயிர் தப்பினார்.