குரூப் 2 மட்டும் குரூப் 4 பாடத்திட்டம்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. அரசு வேலை பலருக்கும் கனவாக உள்ளது, குறிப்பாக பணிக்கான காலியிடங்கள் அதிகமாக அறிவிக்கும் போது லட்சக்கணக்கானோர் இதற்காக பதிவு செய்து பங்கேற்கின்றனர். இந்நிலையில் இதற்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருந்ததாவது, தேர்வர்களின் நலனையும், அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2-க்கான முதல் நிலை தேர்வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 4-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பு தேர்வுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய  இணையதள பக்கங்களில் வெளியிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.