மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி  வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை மாதமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு தொடர்பான புள்ளி விவரங்களின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை. மேலும் இந்த அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.