சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி அவர்கள் ஒரு கருத்தினை தெரிவித்து இருந்தார். அதாவது தமிழ்நாட்டில் தமிழக அரசு சமூக நீதி அரசு என்று பேசி வருகிறது.  ஆனால் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டு,  இன்றுவரை அவர் பதவி ஏற்கவில்லை என்று செய்தித்தாள்களில் படைத்தேன். இப்படி இருக்கும்போது சமூகநீதி பற்றி எப்படித் தான் பேசுகிறார்கள் என்றும்,  தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக நீதி தமிழ்நாட்டில் மறுக்கப்படுகிறது என்றும் தமிழக ஆளுநர் பேசியிருந்தார்.

இந்த விகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் துரைமுருகன் அவர்கள்   அறிக்கையை கொடுத்திருக்கிறார். நீதிமன்றத்தின் உடைய உத்தரவை கூட படிக்காமல் நாயக்கனேரி ஊராட்சி மன்றத்தின் பட்டியலின தலைவர் பதவியேற்பு பற்றி அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் ஆளுநர் பேசியிருப்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர்கள் பரப்புரை செய்வதை போல இருப்பதாக அவர் குறிப்பிட்டு பேசி இருக்கின்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசி இருக்கக்கூடிய துரைமுருகன் தமிழ்நாட்டில் சமூக நீதியால் பிறந்துள்ள அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.  தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கக்கூடிய 12,525 ஊராட்சிகளில் 4.357 இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

அதில திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் காரணமாக அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்து வருகிறது. இதைப்பற்றி அறிந்து கொள்ளாமல் ஆளுநர் இப்படி பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். அரசியல் பேச வேண்டுமானால் அரசியல் தலைவராக தன்னை மாற்றிக்கொண்டு தாராளமாக ஆளுநர் ஆ.என் ரவி அவர்கள் தன் கருத்தை தெரிவிக்கட்டும். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல,  ஒட்டுமொத்த தமிழகமே தயாராக இருக்கின்றது.

ஆனால் உண்மைக்கு மாறான இத்தகைய கருத்துக்களை அவர் பேசுவது அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார். மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கும்,  அரசு நிர்வாகத்தின் கோப்புகளில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற அவர்கள் தொடர்பான லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் வைத்திருக்கக்கூடிய கோப்புகளிலும் கையெழுத்து போட்டு,  தனது நேரத்தை உருப்படியாக செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார்.