![](https://www.seithisolai.com/wp-content/uploads/2025/01/bbdc8635-f2c4-4ecf-9943-9157bf01627f.jpg)
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் ஒரு திருடனை தேடிவந்தனர். அந்த திருடன் இருக்கும் இடம் காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் மூலம் தெரிய வந்த நிலையில் கூகுள் மேப் மூலமாக அந்த இடத்திற்கு செல்ல முடிவு செய்தனர். இதில் 3 போலீசார் மட்டும் சீருடை அணிந்த நிலையில் மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். ஒரு தேயிலைத் தோட்டத்தில் திருடன் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிந்த நிலையில் அவர்கள் google map மூலம் சென்றபோது வழித்தவறி நாகலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்திற்குள் சென்றனர்.
அவர்கள் அங்கு திருடன் பற்றி விசாரித்த நிலையில் சந்தேகத்தில் அந்த மக்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அந்த மாநில காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்கள உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மற்ற காவலர்களை மீண்ட நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.