
கோட் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர் என கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளில் அவர் பேசிய வசனம் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதன்படி,
நீங்க ரொம்ப முக்கியமான வேலையாக போறீங்க. அதை நீங்க பார்த்துக்கோங்க. இதை நான் பார்த்துக்கிறேன். அப்படின்னு சிவகார்த்திகேயன் சொல்ல பலரும் விஜய் அவர்கள் அரசியலுக்கு போறாரு. அதுதான் முக்கியமான வேலை அவர் பார்த்துக்கிட்டு இருந்த சினிமாவ இனி நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு SK சொல்றதாகவும் இதை குறியீடாவே படத்துல வச்சி இருக்கிறதாகவும் பேசப்பட்டு வருகிறது.