தாய்லாந்தில் ஒயிட்லைன் குரூப் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தனது காதலர்களுடன் டேட்டிங் செய்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை இந்த திட்டம் செயலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

அதாவது, 6 மாதங்களுக்கு இந்த டிண்டேர் விடுப்பு ஆப்பை பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று கூறியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுள் ஒருவர் தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என்று கூறியதால், அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனவும் அந்நிறுவனம் நம்புகிறது.