
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் ஞானவாபி மசூதி உள்ளது. இது ஒரு இந்து கோவில் என்றும் அவுரங்கசீப் ஆட்சி செய்த போது 16 ஆம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மசூதியை இந்து கோவிலாக மாற்ற வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குக் கடந்த 1991 ஆம் ஆண்டு தொடரப்பட்ட நிலையில் தொல்லியல் துறை மசூதிக்குள் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஆய்வின் போது மசூதியில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை சமர்ப்பித்தது. இதைத்தொடர்ந்து மசூதியின் தரையின் கீழ் உள்ள தளத்தில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்துக்கள் வழிபட கோர்ட் அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து மசூதி தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நேற்று இந்துக்கள் மசூதிக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கன்னடம் தெரிவிக்கும் விதமாக உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு கருத்தினை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஞானபாபி என்பதே கடவுள் விஸ்வநாதர் தான். துரதிஷ்டவசமாக மக்கள் அதை மசூதி என்று அழைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக் கொள்ள வேண்டும். ஞானபாவிக்குள் கடவுள்களின் சிலைகளும் ஜோதிலிங்கமும் இருக்கிறது. மேலும் இதனை ஞானவாபி சுவர்கள் உரக்க கூறுகிறது என்றார்.