மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் சற்று நேரம் முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை  சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கி நிவாரணம் கேட்டிருக்கும்போது சூழ்நிலையில் தான் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில்  இன்னும் சற்று நேரத்தில் நிதி அமைச்சர் தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்த இருக்கிறார். அதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் எல்.முருகன் இருவருமே நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருக்கிறார்கள். சென்னை ஆகட்டும் அதைவிட தெற்கு மாவட்டங்களாகட்டும் வெள்ள பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக தூத்துக்குடி போன்ற பகுதிகளிலே பாதிப்பு மிகவும் அதிகம் என்பதால் தமிழக மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடத்தும்போது கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

ஆகவே தமிழக பாஜக சார்பில் தமிழ்நாட்டுக்கு மத்திய அமைச்சரிடம் இருந்து கூடுதலாக நிவாரணம் கிடைப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது குறித்து தான் எல். முருகன் மற்றும் அண்ணாமலை நிதி அமைச்சரை சந்தித்து பேசி  அவரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.