தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த நேர்காணல் ஒன்றில் இப்படத்தின் தொகுப்பாளரான சமீர் முகமத் படத்தில் வேலை பார்த்த அனுபவம் மிகவும் மோசமானது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் நான் இதுவரை 60 திரைப்படங்கள் தயாரித்துள்ளேன். ஆனால் எந்த ஒரு திரைப்படமும் பெரிய இயக்குனர்களுடன் வேலை பார்த்ததில்லை. கேம் சேஞ்சர் திரைப்படம் நான் செய்த தவறான முடிவு. நான் படப்பிடிப்பிற்கு முன்பே காண்ட்ராக்டில் சில விஷயங்களை சேர்த்து இருக்க வேண்டும்.

அதை செய்யாதது என்னுடைய தவறு. ஒரு தவறு நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் பொறுப்பு. ஆனால் நான் அது செய்யவில்லை. இதன் பிறகு அப்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.