அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

ஏற்கனவே ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அங்கே ஜோ பைடனை சந்தித்து இருந்தார். அப்போது இந்திய போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளிப்பது மற்றும் இந்தியாவிலேயே சிறு அணல் மின் நிலையங்களுக்கு பதிலாக நியூக்ளியர் பவர் கொண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை  அமைப்பது ஆகியவற்றிற்கான பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தன.

இந்த பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் இந்தியாவில் 6 இடங்களில் சிறு அணுமின் நிலையங்களை அமைப்பது,  இதனால் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு தவிர்க்கப்படும். ஆகவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக கருதப்பட்டு,  அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர இந்தியாவுக்கு போர் விமானங்களுக்கான என்ஜின் தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அளிப்பது. அதீ நவீன போர் விமானங்களை இந்தியா இயக்குவதற்கு உதவிகரமாக இருக்கும் என இந்த இரண்டு முக்கிய விஷயங்கள். அது தவிர 5ஜி டெலிகாம் டெக்னாலஜி,  6ஜி டெலிகாம் டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம், க்ரிப்டோ கரன்சி மூலமும்,  டிஜிட்டல் பிரச்சனைகள் மூலமாகவும் மக்களுக்கு பாதிப்பை தவிர்ப்பதற்கான தொழில் நுட்பங்கள் ஆகியவை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

நாளை முதல் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோ பைடனை தனது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். பிரதமர் இல்லத்திலே ஜோ பைடனுக்கு இன்று இரவு விருந்தும் வழங்கப்படுகிறது. ஆகவே மிகவும் முக்கியத்துவமான ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் இன்று மோடி பைடன்  பேச்சுவார்த்தையில் நடைபெற்றுள்ளன.