நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் அவலாஞ்சி, எமரால்டு, கோத்தகிரி மற்றும் மலை சரிவு பகுதிகளில் நீர் பனி கொட்டுகின்றது. இந்த நீர் பணியின் தாக்கம் பிப்ரவரி மாதம் வரை நீடித்த பின்னர் படிப்படியாக குறைந்து இயல்புநிலை திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.