பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் இதுவரை நடந்துள்ளது. இவரை மக்கள் “பால்கன் நாஸ்திரடாமஸ்” என்று அழைக்கிறார்கள் . இவர் வரும் 2050 ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அதன் படி 2043 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் ஒரு இஸ்லாமிய வியூகம் உருவாகும் என்று “baba vanga. The controversial life and leagacy of the influential bulgarian mystic ” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஐரோப்பாவில் மொத்தம்  44 நாடுகள் உள்ளது. அதில் அல்பேனியா, போஸ்னியா, கோசாவோ மற்றும் துருக்கி ஆகிய 4 நாடுகளில் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மற்ற நாடுகளில் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்கள் தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பாபா வங்காவின் குறிப்பின்படி பிரான்சு, இத்தாலி, ரஷ்யா, யுகே ஜெர்மனி போன்ற நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

அதோடு அந்நாடுகளில் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். தற்போது ஜெர்மனியில் ஷரீஅத் சட்டத்தை வலியுறுத்தி போராட்டங்கள் போன்றவை அவர் கூறியதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. பாபா அவர்கள் கணித்த பல குறிப்புகள் உண்மையாகியுள்ளன என்று பலர் நம்பி வருகின்றனர்.

அதன்படி சோவியத் யூனியனின் பிளவு படுதல், அமெரிக்காவில் தாக்குதல் மற்றும் பரக் ஒபாமா முதலாவது கருப்பின ஜனாதிபதியாக தேர்வாகுதல் போன்றவை அவர் கூறியதன் படி நடந்துள்ளன. மேலும் அவரது கணிப்புகள் எவ்வளவு நம்ப தகுந்தவை என்பதில் சர்ச்சைகள் இருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.