தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் வனத்துறையினர் விலங்குகள் போல் சத்தம் எழுப்பும் ஹரன்களை தயாரிக்க பயன்படும் கருவிகள் தர்மபுரியில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மூன்று கடைகளில் மேற்கூறிய கருவிகளை பயன்படுத்தி வேட்டையாட செல்பவருக்கு வனவிலங்குகளை போல சத்தம் எழுப்பும் ஹாரன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளர்கள் மூன்று பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வனத்துறையினர் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.