ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியை கடந்த 2021-ஆம் ஆண்டு விராட் கோலி ராஜினாமா செய்தார். அதிலிருந்து பெங்களூரு அணி படுமோசமாக விளையாடியது. இந்த நிலையில் ஐபிஎல் 18-வது சீசனில் ரஜத் படிதர் கேப்டனாக செயல்படுவார் என பெங்களூரு அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விராட் கோலி கூறியதாவது, நான் உனக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். கேப்டன் பொறுப்பிற்கு உனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. நாங்கள் எப்போதும் உன் பின்னால் பக்கபலமாக இருப்போம். ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தர வேண்டும் என விராட் கோலி வாழ்த்தியுள்ளார்.